உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் இடம் பிடிக்க பக்தர்கள் போட்டி

திருப்பரங்குன்றம் கோயிலில் இடம் பிடிக்க பக்தர்கள் போட்டி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (அக்.20) துவங்கும் கந்த சஷ்டி திருவிழாவில் கோயிலில் தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் நேற்று முன்தினமே கோயில் மண்டபங்களில் இடம் பிடித்தனர். சஷ்டி திருவிழாவில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள், திருவிழா நடைபெறும் ஆறு நாட்களும், கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். வழக்கமாக ஒருநாளுக்கு முன்புதான் கோயில் மண்படங்களில் சாக்பீசால் இடங்களை ரிசர்வ் செய்தும், போர்வை விரித்தும் இடம் பிடிப்பர். இந்த ஆண்டு நேற்று முன்தினம் தீபாவளி கொண்டாடியவுடன் காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் போட்டிபோட்டு இடங்களை ரிசர்வ் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !