வேலூர் நாராயணி பீடத்தில் 10,008 நெய் தீபம் பூஜை
ADDED :2914 days ago
வேலூர்: நாராயணி பீடத்தில், 10 ஆயிரத்து எட்டு நெய் தீபம் பூஜை நடந்தது. வேலூர் அடுத்த, திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடத்தில், உலக அமைதிக்காகவும், இயற்கை வளத்திற்காகவும், தீபாவளியன்று இரவு, 8:00 மணிக்கு, 10 ஆயிரத்து எட்டு நெய் தீபத்தால் ஸ்ரீ சக்கரம் அமைத்து, சக்தி அம்மா, நாராயணி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.