உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவெட்டி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

வடவெட்டி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி: மேல்மலையனுார் தாலுகா, வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு காலை வினாயகர், பெரியாழி அம்மன், அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு அன்னதானமும், 8:00 மணிக்கு கலை நிகழ்ச்சியும், 10:30 மணிக்கு, அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் அறங்காவலர் புண்ணியமூர்த்தி, விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !