உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி ரோப்கார் பராமரிப்பில் சென்சார் கருவிகள்

பழநி ரோப்கார் பராமரிப்பில் சென்சார் கருவிகள்

பழநி : பழநி முருகன் கோயில் ரோப்கார் பராமரிப்பு பணியில், கோல்கட்டாவில் இருந்து வந்த புதிய ஷாப்ட் மற்றும் விபத்தை தவிர்க்க அதிர்வலைகள் கண்டறியும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பழநி மலைக் கோயிலுக்கு மூன்று நிமிடங்களில் செல்ல ரோப்கார் காலை 7:00 - இரவு 8:30 மணி வரை இயங்குகிறது. இதன் பராமரிப்பு பணிகள் செப்.,12 முதல் நடக்கிறது.ரோப்கார் மேல்தளம், கீழ்தளத்தில் கம்பிவடம், பல்சக்கரங்கள், ஷாப்ட்கள், உருளைகள், எட்டு பெட்டிகள் உட்பட அனைத்தையும் முழுமையாக பரிசோதனை செய்கின்றனர். கம்பிவடம்நன்றாக உள்ளதால் அதனை மாற்றவில்லை. கோல்கட்டாவில் இருந்து ஷாப்ட் வந்துள்ளது. அதை மேல்தளத்தில் பொருத்தியுள்ளனர்.அதிர்வலை கண்டறிய கருவி பலத்த காற்று, மழை குறித்து அறிய ஏற்கனவே வானிலை அறிக்கை கருவி, காற்றின் வேகம் கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் தற்போதைய பராமரிப்பு பணியில் சென்னை தனியார் நிறுவனத்தினர் மூலம் அதிர்வலைகளை கண்டறியும் சென்சார் கருவிகள் கீழ்தளத்தில் ஆறும், மேல்தளத்திலும் இரண்டும் பொருத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் ரோப்கார் இயக்கத்தின் போது, இயந்திரம், கம்பிவடம் உள்ளிட்டவற்றில் வழக்கத்தை விட கூடுதலாக மிகநுண்ணிய அதிர்வு ஏற்பட்டாலும், பீப் ஒலி மூலம் ஆபரேட்டர் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் ஷாப்ட் பழுது, பல்சக்கரம், கம்பி வடம், உருளை தேய்மானம் உள்ளிட்ட பழுதுகளை கண்டுபிடிக்கவும், விபத்தை தவிர்க்கவும் வழி ஏற்பட்டுள்ளது. இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில்,கந்தசஷ்டி விழா (அக்.,26ல்) முடிந்தபின், சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின், ரோப்கார் இயக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !