பிரசன்ன விநாயகர் கோவிலில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
உடுமலை;உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில் இன்று மாலை, 4:00 மணிக்கு கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.பிரசன்ன விநாயகர் கோவிலில் காலை, 7:00 மணிக்கு யாகசாலை வேள்வி பூஜையும், 10:00 மணிக்கு, சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனை நடக்கிறது.தொடர்ந்து மதியம், 3:15 மணிக்கு வேல்வாங்கும் உற்சவமும், 4:00 மணிக்கு சுவாமி புறப்பாடு மற்றும் கந்த சஷ்டி சூரசம்ஹாரமும் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு மேல் மஹா அபிேஷகம், மஹா தீபாராதனை நடைபெறவுள்ளது. உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி கோவில் முருகனுக்கு, கடந்த 20ம் தேதியில் இருந்து முருகனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்து வருகின்றன.பாப்பன்குளம் ஞானபாலதண்டாயுதபாணி கோவிலிலும், இன்று காலை, 5:00 மணியிலிருந்து சிறப்பு அபிேஷகம் நடைபெறுகிறது. மாலை, 4:00 மணிக்கு சுவாமி சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளி, நவவீரர்கள் புடைசூழ புறப்பாடும், மாலை, 5:00 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது.