உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலூர் சக்தி பீடத்தில்வரும் 4ம் தேதி வருஷாபிஷேகம்

மேலூர் சக்தி பீடத்தில்வரும் 4ம் தேதி வருஷாபிஷேகம்

தூத்துக்குடி:தூத்துக்குடி மேலூர் சக்தி பீடத்தில் வரும் 4ம் தேதி வருஷாபிஷேக விழா நடக்கிறது.மேலூர் சக்தி பீடத்தில் வரும் 4ம் தேதி வருஷாபிஷேக விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள் ளது. இதனை முன்னிட்டு வரும் 4ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் வருஷாபிஷேக விழா துவங்குகிறது. அதனை தொடர்ந்து காலை 5மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 6.15 மணிக்கு 18 யாககுண்டம், 108 ராஜ ராஜேஸ்வரி கலசம், ஆயிரத்து 8 சங்கு வைக்கப்பட்டு வருஷாபிஷேகம், கலசவிளக்கு, வேள்விபூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து அன்று காலை 10.25 மணிக்கு அன்னதானம், அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது. காலை 11 மணிக்கு 36 வகையான மங்கள பொருட்களினால் மஹாஅபிஷேகமும், 12 மணிக்கு மஹா ஆராதனையும் நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து இரவு 8.30 மணி வரையிலும் பூச்சொரிதல் நடக்கிறது. ஏற்பாடுகளை மேலும் சக்தி பீடத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !