உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனிப்பெயர்ச்சியில் 1,008 லி., பாலபிஷேகம்: தஞ்சை மூலை அனுமார் கோவிலில் ஏற்பாடு!

சனிப்பெயர்ச்சியில் 1,008 லி., பாலபிஷேகம்: தஞ்சை மூலை அனுமார் கோவிலில் ஏற்பாடு!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேலவீதியில் அரண்மனை தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்நேயர் (மூலை அனுமார்) கோவில் அமைந்துள்ளது. நவக்கிரஹ தோஷம் மற்றும் வாஸ்து தோஷம் பரிகார ஸ்தலமாகும். இக்கோவிலில் உள்ள மூலவர் மூலை அனுமானை சத்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், மற்றும் சேதுபாவா சுவாமிகள் வழிப்பட்ட ஸ்தலமாகும். இங்கு டிசம்பர் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு மற்றும் ஸ்ரீ ஹனுமந் ஜெயந்தி, மார்கழி மாத அமாவாசை ஆகிய வழிபாடுகள் நடக்கிறது. மாலை ஐந்து மணிக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் தீபாரதனை நடக்கிறது. வரும் 24ம் தேதி காலை பத்து மணிக்கு அனுமந் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், தேங்காய் துருவல் அபிஷேகம் தீபாரதனையும், மாலை ஆறு மணிக்கு மலர்களாலான அலங்கார சேவை, ஸ்வாமி புறப்பாடு நடக்கிறது. சனி தோஷம் போக்கும் மூலை அனுமார் வாலில் சனீஸ்வரன் பகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். இக்கோவிலில் பக்தர்கள் பிரதி அமாவாசை, சனிக்கிழமை தோறும் மவுனமாக 18 முறை வலம் வந்து சனி தோஷ நிவர்த்தி காணிக்கையாக ரூபாய் 18யை உண்டியலில் செலுத்தி, சிதறு தேங்காய் (சனிதோஷம் விலக) உடைத்து சென்றால் சனி தோஷம் விலகும் என்பது ஐதீகம். டிசம்பர் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நடக்கும் 1008 பால் அபிஷேகத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் 18 லிட்டர் பாலுடன் பங்கேற்று வழிபடலாம் என கண்காணிப்பாளர் யோகீஸ்வரன் தெரிவித்துள்ளார். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ஞானசேகரன், பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா பான்ஸ்லே மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !