உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி திருக்கொல்லிகாட்டில் ஹோமம்

பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி திருக்கொல்லிகாட்டில் ஹோமம்

திருத்துறைப்பூண்டி: அருள்தரும் பஞ்சினும் மெல்லடியாள் உடனுறைகின்ற அக்னீஸ்வரர் திருக்கோவிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு பொங்கு சனிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காவிரி தென்கரை ஸ்தலங்களில் ஒன்றானதும் திருநெல்லிக்காவல், திஐுதங்கூர், திருவண்டுதுறை ஆகிய பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கு அருகில் திருக்கொல்லிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திருஞானசம்மந்தர், திருவாவுக்கரசர், ஆகியோரால் பாடப்பெற்ற 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் அக்னி பகவான் சிவபூஜை செய்தததால் அக்னிவனம் எனவும் ஸ்வாமி அக்கினிஸ்வரர் எனவும் அழைக்கப்படும் திருக்கொல்லிக்காடு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி யூனியன் பகுதியில் அமைந்துள்ளது. நவகிரகங்களும் மெதுவாக செல்வதால் மந்தன் என பெயர் பெற்றவரும், பாவம் செய்வோரை நற்கதி அடைய செய்பவருமாகிய சனி பகவான் ஈசனை வழிப்பட்டு ஈஸ்வர பட்டம் பெற்று சனீஸ்வரன் என பெயர் பெற்ற ஸ்தலம். கோளது துயர் தீர்க்கும் கொள்ளிக்காடரே, என புகழ்பெறும் இத்தலத்து ஈசனையும், அம்மையையும், மகா லெட்சுமி ஸ்தானத்தில் கையில் கலப்பையும், காகமும் கொண்டு அபயம் அளித்து காக்கும் பொங்கு சனிஸ்வரராக அருள்பாலித்து வருகிறார். பெருமை வாய்ந்த இத்தலத்தில் டிசம்பர் 21ம் தேதி புதன் கிழமை காலை 7.51 மணிக்கு சனிஸ்வர பகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு சிறப்பு வேள்வி மற்றும் அபிஷேகம் நடக்கிறது. மேஷம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவும், ரிஷபம், சிம்மம், தனுசு ஆகிய யோகம் பெறும் ராசிகளுக்கு ஈசனை வழிபடவும் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சனிபெயர்ச்சியை முன்னிட்டு டிசம்பர் 31, ஜனவரி 1, 7,8, ஆகிய தேதிகளில் பொங்கு சனீஸ்வரருக்கு பரிகார ஹோமம் மற்றும் சிறப்பு லட்ச்சார்ச்சனை நடக்கிறது. லட்ச்சார்ச்சனை கட்டணமாக ரூபாய் 200, பரிகார ஹோமம் கட்டணம் ரூபாய் 500, கட்டளை அர்ச்சனை திட்டத்தில் ரூபாய் 300 தபால் மூலம் செலுத்தி பதிவு செய்து கொண்டால் குறிப்பிடும் நாளில் மாதம் ஒரு முறை அர்ச்சனை செய்து தபால் மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும். ரூபாய் 30 லட்சம் செலவில் கோவில் திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. பங்கேற்க விரும்புவோர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எந்த கிளையிலும் 009701000037206 என்ற வங்கி கணக்கு எண்ணில் பணத்தை செலுத்தி ரசீதுடன் செயல் அலுவலர், அருள்மிகு அக்கினிஸ்வரர் திருக்கோவில். திருக்கொள்ளிக்காடு, திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து தங்கள் பரிகாரங்களை செய்து கொள்ளலாம். மேலும் விபரம் பெறுவதுக்கு 9443753808 என்ற மொபைல் எண்ணில் செயல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செயல் அலுவலர் கவியரசு, தக்கார் நீதிமணி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !