உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கோவில்களில்

திருப்பூர் கோவில்களில்

திருப்பூர் : திருப்பூர் பகுதி கோவில்களில், "கந்தனுக்கு வேல்... வேல் கோஷம் முழங்க சூரனை வதம் செய்யும் வைபவம் நடந்தது. ஸ்ரீ கந்த சஷ்டி விழா, கடந்த, 20ம் தேதி, துவங்கியது. காங்கயம் சிவன்மலை, சுப்ரமணிய சுவாமி கோவிலில், 20ம் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் சுவாமி, அடிவாரத்திள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிக்கு எழுந் தருளும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் சுவாமி திருவீதி உலா நடந்தது.முக்கிய நிகழ்ச்சியான, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா, நேற்று நடந்தது. விரதம் இருந்து, சக்தியிடம் சூரனை அழிக்க வேல் வாங்கிய, முருகப்பெருமான், மாலை, 6:00க்கு, தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தேர்வீதியில், நான்கு மூலைகளில், கஜ முகன், சிங்க முகன், பானுகோபன், சூரபத்மன் என பல வடிவங்கள் எடுத்து, அசுரர்கள் ஆடி வந்தனர். அப்போது, பக்தர்கள், "கந்தனுக்கு வேல், வேல் கோஷம் முழங்க, முருகப்பெருமான், சூரன்களை வதம் செய்தார். இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில், எழுந்தருளியுள்ள ஸ்ரீ சண்முகநாதருக்கு, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று, சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு வடிவம் எடுத்து வந்த, அசுரர்களை, முருக பெருமான் வதம் செய்து, ஆட்கொண்ட நிகழ்ச்சி, நூற்றுக்கணக்கான பக்தர்களின், "அரோகரா கோஷம் முழங்க, கோலாகலமாக நடந்தது. திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவில், ஊத்துக்குளி - கதித்தமலை ஸ்ரீ வெற்றி வேலாயுதசுவாமி கோவில், நல்ார் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரசுவாமி, சுப்ர மணியர் கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், மங்கலம், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில் சுப்ரமணியர் கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நேற்று, கோலாகலமாக நடந்தது. இன்று, தெய்வானையுடன் சுவாமிக்கு திருக்கல்யாணம், திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. அலகுமலை பொங்கார், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவி லில், நேற்று சூரசம்ஹார விழா நடந்தது. மதியம், 2:30 மணிக்கு முருகப்பெருமான், தன் தாயார் பத்மாவதி தேவியிடம் இருந்து, சக்தி வேலை பெற்று கொண்டு சூரனை வதம் செய்ய புறப்பட்டார். போருக்கு வந்த சூரனை முருகப்பெருமான், சக்திவேல் கொண்டு வதம் செய்தார். இன்று, காலை, 10:30 மணிக்கு, திருக்கல்யாணம், விருந்து ஆகியன நடக்கிறது. ஏற்பாடுகளை திருக்கோவில் பக்தர் பேரவை மற்றும் மாதாந்திர சஷ்டி வழிபாட்டுக் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !