சிறுதாவூர் புத்தர் கோவில் புத்துயிர் பெறுமா?
ADDED :2918 days ago
சிறுதாவூர்: சிறுதாவூரின், வரலாற்று பொக்கிஷமான புத்தர் கோவில், முற்றிலும் காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பாசன ஏரி, விசாலமான தாமரை குளம், பழமை பொக்கிஷங்களாக சிவன் கோவில் மற்றும் புத்தர் கோவில் உள்ளது. இதில், புத்தர் கோவில் பராமரிப்பின்றி சீரழிந்து கருங்கற்களால் ஆன துாண்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. மேலும், கோவிலில் இருந்த புத்தர் சிலை, இப்பகுதியில் உள்ள வீட்டு மனையில் புதைந்திருக்கலாம் என, தெரிகிறது. இங்குள்ள கற்துாண்களை ஒருங்கிணைத்து சுற்றியுள்ள இடங்களை கைப்பற்றி, புத்தர் கோவில் புதிதாக கட்ட, தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, சிறுதாவூர் மக்களிடையே எழுந்துள்ளது.