உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் :திரளாக பங்கேற்ற பக்தர்கள்

சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் :திரளாக பங்கேற்ற பக்தர்கள்

உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி நிறைவு விழாவையொட்டி, சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.உடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழா, கடந்த 20ம்தேதி முதல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதையடுத்து நேற்று சுப்பிரமணிய சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் கோலாகலாமாய் நேற்று நடந்தது. உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், காலை, 9:00 மணி முதல், திருக்கல்யாண சிறப்பு பூஜைகள் துவங்கியது. காலை, 10:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் சிறப்பு ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, மாப்பிள்ளையாக இருக்கும் சுப்பிரமணிய சுவாமிக்கு கங்கணம் கட்டும் நிகழ்வு நடந்தது.

இதையடுத்து, 11:40 மணி அளவில் மங்கள ஒலி எழுப்ப, வள்ளி,தெய்வானை சுவாமிகளுக்கு மாங்கல்ய தாரணம் நடந்தது. பின்னர், மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பரவசம் பொங்க, ஆரோகரா கோஷத்தை எழுத்தி, வழிபட்டனர். மஹா தீபாராதனை, வேத பாராயணம் நடந்தது. திருமணக் கோலத்தில், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலில் திருக்கல்யாண வைபவத்தை காண பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.பக்தர்களுக்கு அன்னதானமும் நடந்தது. சுற்றுப்பகுதி, முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !