கிணத்துக்கடவு சூரசம்ஹார விழாவில் பக்தர்கள் பரவசம்
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், வேலாயுதசாமிக்கும், வள்ளி,தெய்வானைக்கும்திருக்கால்யாண உற்சவம் நேற்று நடந்தது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் சூரசம்ஹார விழா, கடந்த 20ல் காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது.நேற்று முன் தினம் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து, வேலாயுதசாமிக்கும், வள்ளி, தெய்வானைக்கு திருகல்யாண உற்சவம் நேற்று காலை, 10:30 மணிக்கு துவங்கியது. இதில், மூலவர் வேலாயுதசாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. மலை கோவிலில் இருந்து சிவலோகநாதர் கோவில் எதிரே உள்ள ஆதிபட்டி விநாயகர் கோவிலில்,மாப்பிள்ளை அழைப்பு சென்று, மலை கோவில் வந்தனர்.பின், வேலாயுதசாமி, வள்ளி, தெய்வானை உற்சவ சிலைகள் வைத்து, கலச பூஜையும், அதனை தொடர்ந்து கணபதி பூஜையும் நடந்தது. சஷ்டி குழுவினர் மற்றும் பக்தர்கள் சஷ்டி பாராயணம் செய்த பின், திருக்கல்யாணஉற்சவம் நடந்தது.இன்று மதியம், 12:00 மணிக்கு மூலவர் வேலாயுதசாமிக்கு மஹாஅபிஷேகத்துடன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.