உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மருவத்தூரில் இருமுடி விழா துவக்கம்!

மேல்மருவத்தூரில் இருமுடி விழா துவக்கம்!

மதுராந்தகம் : மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், இருமுடி விழா கோலாகலமாக துவங்கியது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தைப்பூச விழாவையொட்டி, இருமுடி விழா நடந்து வருகிறது. இந்தாண்டு இருமுடி துவக்க விழா, கடந்த 5ம் தேதி, காலை 3 மணிக்கு, மேள தாளங்கள் ஒலிக்க, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடந்த 5ம் தேதி துவங்கிய இருமுடி விழா, அடுத்த ஆண்டு பிப்., 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்., 6ம் தேதி தைப்பூச ஜோதி விழா நடக்கிறது. நாடு முழுவதுமிருந்து பக்தர்கள் மாலை அணிந்து, மாவட்ட வாரியாக தினமும் கோவிலுக்கு வந்து, இருமுடி செலுத்தி, அம்மனை வழிபட்டு செல்வர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும், உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை சார்பில், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, சுற்றுப்புர சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை, ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமையில், ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்கள் மற்றும் ஆதிபராசக்தி இளைஞர் அணியினர் செய்துள்ளனர். விழாவையொட்டி, சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !