அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்
ADDED :2938 days ago
பேரையூர், கார்த்திகை தீப விழாவுக்காக, அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் பேரையூர் சிலைமலைப்பட்டி பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கூறியதாவது: பழமை மாறாமல், களிமண்ணால் ஆன அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடும் பக்தர்களால் எங்களின் மண்பாண்ட தொழில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் 30 முதல் 150 மில்லி வரை கொள்ளளவு கொண்ட அகல் விளக்கு தயார் செய்ய
வியாபாரிகளிடம் இருந்து ஆர்டர் வந்துள்ளது, என்றனர்.