பாடலீஸ்வரர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ.5 லட்சம்
ADDED :3103 days ago
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் காணிக்கை உண்டியல் மூலமாக 5 லட்சத்து 12 ஆயிரத்து 565 ரூபாய் வசூல் கிடைத்தது. கடலுார் பாடலீஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நேற்று, நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணியில் வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள் 25 பேர் ஈடுபட்டனர். அதில், 5 லட்சத்து 12 ஆயிரத்து 565 ரூபாய் ரொக்கம், 15 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளிைய பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்தனர். கோவில் ஆய்வாளர் சுபத்ரா, செயல் அலுவலர் நாகராஜன் உடனிருந்தனர்.