திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.20 லட்சம் வருமானம்
ADDED :2978 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மற்றும் உப கோயில்களான அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயில், சொக்கநாதர் கோயில், பழநி ஆண்டவர் கோயில், பால்சுனை கண்ட சிவபெருமான் கோயில், காசி விஸ்வநாதர் கோயில்களிலுள்ள உண்டியல்கள் கோயில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி முன்னிலையில் எண்ணப்பட்டன. அதில் 20 லட்சத்து 92 ஆயிரத்து 300 ரூபாய், 144 கிராம் தங்கம், 2 கிலோ 325 கிராம் வெள்ளி இருந்தது. கோயில் பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.