அடையார் அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :2930 days ago
சென்னை: அடையார், காந்திநகர் அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னை, அடையார், காந்திநகர் அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் உள்ள அனந்தீஸ்வரர் சன்னதி கும்பாபிஷேக விழா இன்று காலை(நவ.,2ல்) நடைபெற்றது. விழாவில் ஹரிஹரபுரம், ஸ்ரீ மடத்தின் பீடாதிபதியான சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் அனந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தார். சிறப்பு அலங்காரத்தில் அனந்தீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.