மொடச்சூர் கோவிலில் டிச., 29ல் குண்டம் விழா
ADDED :5051 days ago
கோபிசெட்டிபாளையம்: கோபி மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில் டிச., 29 தேதி குண்டம் திருவிழா நடக்கிறது. டிச., 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்குகிறது. 26ம் தேதி காலை 11 மணிக்கு மஹா அபிஷேகம், 12.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரம், இரவு 10 மணிக்கு கிராம சாந்தி, கொடியேற்றம் நடக்கிறது. டிச., 28ம் தேதி காலை 9 மணிக்கு மாவிளக்கு, 29ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைத்தல், காலை 7.30 மணிக்கு குண்டம் இறங்குதல், 30ம் தேதி மாலை 4 மணிக்கு திருத்தேர் வலம் வருதல், 31ம் தேதி இரவு 10.30 மணிக்கு புஷ்பப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, ஜன., 1ம் தேதி காலை 10 மணிக்கு தெப்பத்தேர் உற்சவம், பகல் 12 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவம், ஜன., 2ம் தேதி மறுபூஜை நடக்கிறது.