உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேட்டைக்கொருமகன் கோவிலில் தீப ஜோதி

வேட்டைக்கொருமகன் கோவிலில் தீப ஜோதி

கூடலூர்:கூடலூர் நம்பால கோட்டை வேட்டைக்கொருமகன் கோவிலில் பரணிதீப ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.கூடலூர் நம்பால கோட்டை வேட்டைக்கொருமகன் கோவில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி மகா ஜோதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார, வில்வ அர்ச்சனை, ஸ்ரீருத்ர பாராயணம் பூஜைகள் நடந்தன. மாலை 4 மணிக்கு நம்பால கோட்டையிலிருந்து கிரிவலம் துவங்கியது. ஊர்வலம் மஞ்சமூலா, கீல்லூர் வழியாக கோவில் அருகேயுள்ள சிவன் மலையில் நிறைவடைந்தது. மாலை 6.10 மணிக்கு தீப ஜோதி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. விழாவில், கூடலூர் நகராட்சி தலைவர் ரமா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகøளை இந்துசமய அறநிலைய துறை மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !