கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள 16 சோடசலிங்க சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம்
கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள 16 சோடசலிங்க சுவாமிகளுக்கு அன்னாபிஷே கம் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளக்கரையில் எழுந்தரு ளியுள்ள 16 சோடசலிங்க சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றிலும் 16 வகையான தானங்களை வலியுறுத்தும், வகையில் 16 மண்டபங்கள் அமைந்துள்ளன. இதில் ஒவ்வொரு மண்டபத்தி லும் பிரம்மதீர்ததேஸ்வரர், முக்தேஸ்வரர், தனேஸ்வரர், விருஷபேஸ்வரர், புரணேஸ்வரர், கோணேஷ்வரர், பக்திகேஸ்வரர், பைரவேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், வியாசகேஸ்வரர், உமா பாகேஸ்வரர், நிருதீஸ்வரர், பிரம்மேஸ்வரர், கங்காதேஸ்வரர், முக்ததீர்த்தேஸ்வரர், சேஷஸ் தரபாலேஸ்வரர் என மொத்தம் 16 சிவலிங்கள்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒருங்கிணை த்து சோடஷ மகாலிங்க சுவாமிகள் என அழைக்கப்படும். இத்தகைய சிறப்பு பெற்ற சோடஷ மாகலிங்க சுவாமிகள் 16க்கும் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு இன்று காலை எண் ணெய், அரிசிபொடி, மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் என பலவித பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இறுதியாக தயிருடன் கலந்த
அன்னத்தை கொண்டு சிவலிங்க மேனியில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து
சோடஷ மகாலிங்க சுவாமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இத்தகையை அன்னாபிஷேகத்தில் சிவலிங்கத்தின் மீதுள்ள ஒவ்வொரு சோற்று பருக்கையும் ஒவ்வொரு சிவலிங்கமாக காட்சியளிப்பதாக ஐதீகம்.
அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சிவவலிங்கத்தை தரிசனம் செய்வதன் மூலம் ஒரே சமயத் தில் பல நூறு சிவலிங்கங்களை தரிசனம் செய்த பலன்கிட்டும் என்பது நம்பிக்கை.
இத்தகையை அன்னாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அபிமுகேஸ்வரர் ஆலய கிருத்திகை வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர். மகாமக குளக்கரையி்ல் உள்ள 16 மண்டபங்களும் நேற்று திறக்கப்பட்டது. இதில் நாள் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.