உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னிவாடி கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், அன்னாபிஷேக விழா

கன்னிவாடி கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், அன்னாபிஷேக விழா

கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடந்தது.

மூலவர், உற்ஸவர், நந்திக்கு 30 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. மூலவருக்கு அன்னக் காப்புடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தேவார, திருவாசக பாராய ணத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது.

சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், காரமடை ராமலிங்கசுவாமிகள் மடம், வெல்லம்பட்டி மாரிமுத்து சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன், வாலை, சக்தி அம்மனுக்கு பவுர்ணமி மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !