உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை தீப விழாவில் தெப்ப உற்சவம்

தி.மலை தீப விழாவில் தெப்ப உற்சவம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவில் நேற்று தெப்ப உற்சவம் நடந்தது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் தீப திருவிழாவில் மஹா தீபம் 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது ஏற்றப்பட்டது. இந்த தீபம் தொடர்ந்த 11 நாட்கள் எரியும். இவை 40 கி.மீ தூரம் வரை தெரியும். இதனால் 40 கி.மீ தூரம் வரை வசிக்கும் மக்கள் தீபம் எரியும் 11 நாட்களும் தீப தரிசனத்தை காணலாம்.நேற்று இரவு அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம் நடந்தது. இன்று (டிச.,10) உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் வருவர். கிரிவலம் வரும்போது வழிநெடுகிலும் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடன் செலுத்தியும், மண்டகப்படி செலுத்தியும் வழிபடுவர். ஆண்டுக்கு இரு முறை மட்டுமே அருணாசலேஸ்வரர் கிரிவலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மாலை 6.15 சந்திர கிரஹணம் வருவதால் மாலை கிரஹணம் துவங்கும் முன் ஸ்வாமி கிரிவலம் வந்து கோவிலுக்கு வந்தடைவார். கிரஹணம் முடிந்ததும் பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !