அன்னமலை முருகன் கோவிலில் கிருத்திகை பூஜை
ADDED :2925 days ago
மஞ்சூர் : மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை பூஜை சிறப்பாக நடந்து வருகிறது. நடப்பு மாதம் பூஜை நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை, 11:00 மணிக்கு முருக பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உட்பட, 12 அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, முருக பக்தர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு பின், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பூஜை செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குருகிருஷ்ணாநந்தாஜி செய்திருந்தார்.