உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவிலில் வரும் 9ல் தேரோட்டம்

முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவிலில் வரும் 9ல் தேரோட்டம்

சென்னிமலை: முருங்கத்தொழுவு மகா மாரியம்மன் கோவில் விழா தேரோட்டம், வரும், 9ல் நடக்கிறது. சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு கிராமம், மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பூச்சாட்டுதல், கடந்த, 1ல் நடந்தது. இதை தொடர்ந்து தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது. தினமும் காலையில், பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தலவுமலை, வடுகபாளையம் பக்தர்கள், காவடி எடுத்து வந்து, இன்றிரவு மாரியம்மனை வழிபடுகின்றனர். நாளை, இரவு, 10:00 மணிக்கு, கிராம சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. நவ., 8ல் காவிரிக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து, மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேக ஆராதனை நடக்கும். இதை தொடர்ந்து அதிகாலையில், காளிக்காவலசு பெண்கள், மாவிளக்கு எடுத்து வந்து மாவிளக்கு பூஜை நடக்கும். நவ.,9ல் காலை, 7:00 மணிக்கு உற்சவ அம்மைக்கு மகா அபிஷேகம், 7:30 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நடக்கும். அதை தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு நடத்துவர். மதியம், 3:00 மணிக்கு, குழந்தைகள் சேறுபூசி வேடமிட்டு மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். இரவு வாணவேடிக்கை நடக்கிறது. நவ.,10ல் மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. தேரோட்டத்தை தொடர்ந்து, முருங்கத்தொழுவு கிராமம் முழுவதும் உள்ள, 14க்கும் மேற்பட்ட ஊர்களில், பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !