உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடி விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

போடி விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

போடி: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, போடியில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. போடி புதுார் சங்கர விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கோயில் தலைவர் தாஸ், கவுரவத்தலைவர் வடமலை ராஜையபாண்டியன் முன்னிலை வகித்தனர். சுவாமி அலங்காரத்தினை அர்ச்சகர் பரமசிவம் செய்திருந்தார். குலாலர்பாளையம் விநாயகர் கோயில், போடி அணைப்பிள்ளையார் கோயில், சந்தை பேட்டை விநாயகர் கோயில், அக்ரஹார விநாயகர், அமராவதிநகர் விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.  பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !