உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிேஷக பணிகள்: விஸ்வ இந்துபரிஷத் புகார்

அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிேஷக பணிகள்: விஸ்வ இந்துபரிஷத் புகார்

பழநி, பழநி அடிவாரம் அழகு நாச்சியம்மன் கோயிலில் பெயரளவில் கும்பாபிேஷக திருப்பணிகள் நடந்துள்ளதாக விஸ்வஇந்து பரிசத் புகார் தெரிவித்துள்ளது. பழநி மலைக்கோயில் கிழக்குகிரிவீதி அழகு நாச்சியம்மன் கோயிலில் கடந்த 1999ம் ஆண்டில் கும்பாபிேஷகம் நடந்தது. அதன்பின் கும்பாபிேஷகம் நடத்துவதற்காக கோயில் மண்டபம், சிலைகளை புதுப்பிக்கும் திருப்பணிகள் நடக்கிறது. வரும் டிச., 6ல் கும்பாபிேஷகம் நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அழகுநாச்சியம்மன் கோயில் கதவுகள் பல ஆண்டுகளாகி விட்டதால் சேதமடைந்துள்ளது. அதனை மாற்ற பக்தர்கள் பலமுறை வலியுறுத்தியும் கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அப்படியே வர்ணம் பூசுகின்றனர். ஆண்டிற்கு ரூ.பலகோடி வருமானம் உள்ள பழநி முருகன் கோயில் நிர்வாகத்தினர் அழகுநாச்சியம்மன் புதிததாக இரும்புக்கதவு பொருத்த வேண்டும், திருப்பணிகளை பெயரளவில் செய்யாமல் முழுமையாக செய்ய வேண்டும் என விஸ்வ இந்துபரிசத் மாவட்ட இணைச்செயலாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !