உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசமுத்திரம் பெருமாள்கோயிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால்

பாலசமுத்திரம் பெருமாள்கோயிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால்

பழநி: பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயிலில் நவ.,30ல் மகா கும்பாபிேஷகம் நடைபெற முகூர்த்தக்கால் ஊன்றும் விழா நடந்தது. பழநி முருகன் கோயிலைச்சார்ந்த பாலசமுத்திரம் அகோபில வரதராஜபெருமாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு ஆவணி பிரமோற்ஸவ விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  கடந்த 1996ல் மகாகும்பா பிஷேக விழா நடந்தது. தற்போது ரூ.95 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கோயில் கோபுரங்கள், சிலைகள், புதிய தரைத்தளம், முன்மண்டபம் உள்ளிட்ட பணிகள் முடிந்துள்ளதால் வரும் நவ.,30ல் மகாகும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று காலை 9:30மணி அளவில் கோயில் உட்பிரகாரம், வெளியே முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. துணை ஆணையர் மேனகா, கண்காணிப்பாளர் முருகேசன், பேஷ்கார் சீனி மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !