புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் தீ மிதி விழா
ADDED :2924 days ago
வெண்ணந்தூர்: ராசிபுரம் அடுத்த, ஆர். புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் ஐப்பசி தேர்த் திருவிழா அக்., 24ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கம்பம் நடுதல், கடந்த, 6ல் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, தீ மிதி விழா துவங்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற, குழந்தைகளை தூக்கிக் கொண்டு, அக்னி சட்டியுடன் தீ மிதித்தனர். மாலை, திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று, சத்தாபரணத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.