தேவி கருமாரியம்மன் கோவிலில் சனீஸ்வரர் சிலை பிரதிஷ்டை
ADDED :2971 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தேவி கருமாரியம்மன் கோவிலில், சனீஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 2ல் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், விநாயகர், துர்கை, கால பைரவர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம், நாகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் ஏராளமானோர் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில் வளாகத்தில், புதிதாக சனீஸ்வரர் கோவில் கட்டப்பட்டு, நேற்று காலை, சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக, சாஸ்திரிகள் பத்மநாபன், ராமச்சந்திரன் குழுவினர், கணபதி, நவக்கிரகம், சுதர்சனம், தன்வந்திரி, லட்சுமி ஹோமங்களை நடத்தினர்.