தொரவி கோவிலில் திருவாசகம் முற்றோதல்
ADDED :2951 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் திருப்பணி விரைந்து நடைபெற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, கோவிலில் சிவனடியார்கள் மாலதி, அர்ச்சனா தலைமையில் சிவனடியார்கள் கோவிந்தராசன், கூடப்பாக்கம் சிவனடியார்கள் குழுவினர் திருவாசகம் முற்றோதினர். பின்னர் சிவகாமி உடனுறை நடராஜருக்கு சிறப்பு மகா தீப ஆராதனை நடந்தது. பூஜைகளை புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்தார். நிகழ்ச்சியில் தொரவி அ.தி.மு.க., பிரமுகர் சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சங்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.