சபரிமலை நடை திறப்பு: எருமேலியில் பேட்டை துள்ளிய பகதர்கள்
சபரிமலை: மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோயில் நடையை திறந்தார். நடை திறப்பதை முன்னிட்டு, ஆந்திர பகதர்கள் எருமேலியில் பேட்டை துள்ளி ஐயப்பனை தரிசனம் செய்ய சென்றனர்.
வழக்கத்தை விட இந்த ஆண்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை சபரிமலையில், ஒரு மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 17ம் தேதி கார்த்திகை பிறக்கிறது. கேரளாவில் ஒரு நாள் முன்பாக நாளை(16ம் தேதி) கார்த்திகை மாதம் பிறந்து மண்டலகாலம் தொடங்குகிறது. இதற்காக சபரிமலை நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளதை தொடர்ந்து சபரி மலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த ஆண்டு இரண்டாயிரம் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். கேரள அரசு போக்குவரத்துக் கழகம் முதற்கட்டமாக 300 சிறப்பு பஸ்களை இயக்குகிறது.