4. சம்மோஹன சாஸ்தா
ADDED :5144 days ago
தேஜோமண்டல மத்யகம் த்ரிணயனம் திவ்யாம் பராலங்க்ருதம்
தேவம் புஷ்ப ஸரேக்ஷúகார்முக லஸந் மாணிக்ய பாத்ராபயான்
பிப்ராணம் கரபங்கஜை: மதகஜஸ்கந்தாதிரூடம் மஹா
சாஸ்தாரம் ஸததம் நமாமி வரதம் த்ரைலோக்ய ஸம்மோஹனம்
ஒளி மண்டலத்தின் இடையில் வீற்றிருப்பவரும், முக்கண்ணரும், அழகிய ஆடையினால் அலங்கரிக்கப்பட்டவரும், புஷ்பபாணம் கரும்புவில் மாணிக்க மயமான பாத்திரம் அபய முத்திரை இவைகளை மலர் கரங்களால் தரித்துக் கொண்டிருப்பவரும், மத யானை மீது அமர்ந்திருப்பவரும், வேண்டிய வரங்களை வழங்குபவரும், மூன்றுலகங்களையும் மோஹிக்கச் செய்கின்றவருமான மோஹன சாஸ்தாவை வணங்குகின்றேன்.