உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை பாத யாத்திரை பக்தர்களுக்கு சிறப்பு நுழைவு தரிசனம்!

திருமலை பாத யாத்திரை பக்தர்களுக்கு சிறப்பு நுழைவு தரிசனம்!

நகரி:திருப்பதி தேவஸ்தான போர்டின் ஆலோசனை கூட்டம், சேர்மன் பாபிராஜூ தலைமையில் நேற்று முன்தினம் திருமலையில் நடந்தது. பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தற்போது, "திவ்ய தரிசனம் என்ற பெயரில் அனுமதி டிக்கெட் வழங்கப்படுகிறது. திருமலைக்கு வாகனங்கள் மூலம் நேராக வரும் பக்தர்கள், துரிதமாக சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக தற்போது, 300 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இந்த வசதி தொடரும். தனி வரிசை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஏகாதசி, துவாதசி ஆகிய இரு நாட்களில் மட்டும் திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் சிறப்பு ஏற்பாடாக, 100 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள், வழங்கி தனி வரிசையில் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என, ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை வழியாக திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களிடையே, இதன் முக்கியத்துவத்தை மேலும் உணர்த்தும் வகையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்கள், 100 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு நுழைவு தரிசன அனுமதி டிக்கெட்டுகளை, வரும், 21ம் தேதி முதல் திருப்பதி, தேவஸ்தான தகவல் மையங்களில் இயங்கி வரும் இ-தரிசன கவுன்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை, பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !