மேலநத்தம் அருந்தபசு அம்மன் கோயிலில் சூரை திருவிழா
ADDED :5045 days ago
திருநெல்வேலி : மேலப்பாளையம் அருகே மேலநத்தம் அருந்தபசு அம்மன் கோயிலில் சூரைத்திருவிழா கோலாகலமாக நடந்தது. மேலப்பாளையம் அருகே உள்ள மேலநத்தத்தில் அருந்தபசு அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக் கோயிலில் நேற்று முன்தினம் சூரை திருவிழா நடந்தது. இதனைமுன்னிட்டு அன்று காலை கோயிலில் கணபதி ஹோமமும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதனையடுத்து மாலையில் மேலநத்தம் மெயின் ரோட்டின் அருகில் உள்ள மைதானத்தில் சூரை திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் மேலநத்தம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை வழிபட்டனர். இரவு அருந்தபசு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.