ராமாநாதீஸ்வர் கோவிலில் சங்காபிஷேக பூஜை
ADDED :2904 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரம் ராமாநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, ராமாநாதீஸ்வரருக்கும், ஞானாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மூலவர் சன்னதி எதிரில் 108 சங்காபிஷேகம், யாகசாலை பூஜைகளளும், ஹோமங்களும் நடந்தன. அதனைத்தொடர்ந்து அபிஷேக வழிபாடும், தீபாரதனையும் நடந்தது. முன்னதாக தமிழ் வேத வார வழிபாட்டுச் சபையினர், தேவாரப் பாடல்கள் பாடினர்.