உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகனும் மயிலும்

முருகனும் மயிலும்

மயில் தோகை விரித்தால் ஓம் போல் தோன்றும். ஓம் என்றால் எல்லாம் நானே என பொருள். அனைத்துக்கும் அனைத்துமானவர் முருகன். ஆணவம் என்ற பாம்பை மயில், தனது கால்களுக்குள் அடக்கியிருக்கும். மனிதனும் ஆணவத்தை அடக்கி முருகனை சரணடைந்தால், எல்லா நன்மையும் பெறலாம். மாமரமாக நின்ற சூரனை இரண்டாக கிழித்து ஒரு பகுதியை மயிலாகவும், மற்றொன்றை சேவலாகவும் மாற்றிக் கொண்டார் முருகன்.  எதிரியாக இருந்தாலும் அவனுக்கும் கருணை காட்ட வேண்டும் என்பதை மயில் தத்துவம் உணர்த்துகிறது. இதனால் முருகனை, சூரனுக்கு பெருவாழ்வு தந்தவர் என சொல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !