நெல்லிக்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :2907 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வைடிபாக்கம் முத்தாலம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் வைடிபாக்கம் முத்தாலம்மன் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது.இரவு பம்பை உடுக்கை இசையுடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.