புட்டபர்த்தியில் ஸ்ரீசத்ய சாய் சேவா சர்வதேச வேத மாநாடு
ADDED :2977 days ago
புட்டபர்த்தி: ஸ்ரீசத்ய சாய் சேவா அமைப்பின் சார்பில் சாய்பாபா பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சர்வதேச முதல் வேத மாநாடு நவ.,20-ல் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் துவங்கி நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்று ஒற்றுமை, உலக சமாதானத்தை வலியுறுத்தி பிரார்த்தனை நடந்தது. இதில் புகழ்பெற்ற பேச்சாளர்களான ஜெக ஜெகதீசன் (மலேசியா), டாக்டர்கள் என்.கோபாலகிருஷ்ணன், நரேந்திர ரெட்டி, அனுராதா சவுத்ரி, ஜியார்ஜ் (கிரீஸ்), பேராசிரியர் முகமது ஹனீப்கான் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சாய்பாபாவிற்கு மங்கள ஆரத்தி, பஜனை நடந்தது.