பெண்கள் சபரிமலை செல்ல தடை
ADDED :2977 days ago
சபரிமலை: சபரிமலை, 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆர்வ மிகுதியில் பெண்கள் இங்கு வந்து விடுகின்றனர். இவர்களை தடுக்க பம்பையில் பெண் போலீஸ் மற்றும் தேவசம் பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலையில் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து 15 பேர் கொண்ட பக்தர்கள் வந்தனர். அதில் ஒருவரது நடையில் சந்தேகம் அடைந்த பெண் போலீசார் அவரை தனியாக அழைத்தனர்.பேன்ட், ஷர்ட் அணிந்து தலையில் குல்லா போன்ற தொப்பி அணிந்திருந்தார்.
போலீஸ் விசாரணையில் அவர் பெண் என்பதை ஒப்புக் கொண்டார். இதை தொடர்ந்து அவரை தங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொண்டு இதர பக்தர்களை சன்னிதானத்துக்கு அனுப்பினர். தரிசனம் முடிந்து வந்த பின்னர் அவர்களுடன் ஊருக்கு அனுப்பி வைத்தனர்.