உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புட்டபர்த்தி சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா கோலாகலம்

புட்டபர்த்தி சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா கோலாகலம்

மதுரை: பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 92 வது பிறந்த நாள் விழா இன்று(நவ.23) நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தரிசனம் செய்து வருகின்றனர்.

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 92 வது பிறந்த நாள் விழா புட்டபர்த்தியில் விமரிசையாக நடைபெற்றுவருகிறது.  பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு, புட்டபர்த்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். சாய்பாபாவின் திருஉருவப் படத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. குழந்தைகளின் இசைநிகழ்ச்சிகள் நடந்தன. பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள முஸ்லீம் அமைப்பினர் அன்னதானம் வழங்கினர்.

இதேபோல் மதுரை சத்ய சாய் நகரில் உள்ள சத்ய சாய் சேவா சமிதியில் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா 92 வது பிறந்த நாளை முன்னிட்டு  ஸ்ரீ பாதத்திற்கு தீப ஆராதனை நடந்தது. அதிகாலை 5:20 மணிக்கு ஓம்கார சுப்ரபாதம், பக்தி சொற்பொழிவு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !