உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை சீசன் துவக்கம்: காஞ்சியில் குவியும் அய்யப்ப பக்தர்கள்

சபரிமலை சீசன் துவக்கம்: காஞ்சியில் குவியும் அய்யப்ப பக்தர்கள்

காஞ்சிபுரம் : சபரிமலை சீசன் துவங்கியதை அடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கு, அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், சபரிமலைக்கு சென்று வருகின்றனர். இவர்கள், மலைக்கு செல்லும் போதும், திரும்பும் போதும், வழியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல், வெளி மாவட்ட, மாநிலங்களைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள், காஞ்சிபுரத்திற்கு வர துவங்கியுள்ளனர். இதனால், காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன், வரதராஜ பெருமாள் கோவில்களில், வெளியூர் பக்தர்களை அதிகளவில் காண முடிகிறது. அய்யப்ப பக்தர்களால் கோவில் அருகில் உள்ள, பட்டு ஜவுளி கடைகள், ஓட்டல், டிபன் சென்டர்களில், விற்பனை சூடுபிடிக்க துவங்கிஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !