உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பம்பையில் ரயில் டிக்கெட்: முன்பதிவு மையம் தொடக்கம்

பம்பையில் ரயில் டிக்கெட்: முன்பதிவு மையம் தொடக்கம்

சபரிமலை; பக்தர்கள் வசதிக்காக பம்பையில் ரயில்வே முன்பதிவு மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் ரயில் மூலம் செங்கன்னுார், கோட்டயம் ரயில் நிலையங்களுக்கு வந்து அங்கிருந்து பஸ் மூலம் பம்பை வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யவும், ரயில் தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் பம்பையில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் ஆஞ்சநேயா ஆடிட்டோரியம் அருகில் திறக்கப்பட்டுள்ளது. தட்கல் டிக்கெட் உட்பட எந்த பகுதிக்கும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். ரயில் தொடர்பான விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை இது செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !