தபால் அட்டையில் வால்பாறை ஆலயம்
ADDED :2895 days ago
வால்பாறை: தபால்துறை வெளியிட்ட போஸ்ட்கார்டில், கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயம் இடம் பெற்றுள்ளது.வால்பாறையிலிருந்து எட்டு கி.மீ.,தொலைவில் உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இங்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த ஆலயம் கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆண்டு தோறும் திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. இந்நிலையில், தபால்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள, 20 திருத்தலங்கள் தேர்வு செய்து, அந்த திருத்தலங்களின் படத்துடன் தபால்அட்டைகளில் அச்சிடப்படவுள்ளது. இதில், வால்பாறை அடுத்துள்ள கருமலை வேளாங்கண்ணிமாதா ஆலயம் இடம் பெற்றுள்ளது. ”தபால் துறையின் இந்த அறிவிப்பு கிறிஸ்துவ மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது” என்று திருத்தல பங்கு தந்தை மரிய ஜோசப் தெரிவித்துள்ளார்.