உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இளங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

இளங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

வீரகனூர்: இளங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் , கோலாகலமாக நடந்தது. தலைவாசல், இலுப்பநத்தத்தில் உள்ள, இளங்காளியம்மன் கோவிலில், நேற்று காலை, கோபுர கலசங்கள், யாக சாலையில் புறப்பட்டு, வரதராஜ பெருமாள், மகா மாரியம்மனுக்கு, கும்பாபி?ஷகம் நடந்தது. இளங்காளியம்மன் கோபுரம், அண்ணாமலை, உண்ணாமலை, பரிவார சுவாமிகளுக்கு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க, கும்பாபி?ஷகம் நடத்தி வைத்தனர். பின், மகா தீபாராதனை காட்டப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !