பட்டத்தரசி அம்மன் கோவிலில் வரும் 29ல் கும்பாபிஷேக விழா
ADDED :2890 days ago
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி, பழனிபுரம் பட்டத்தரசி அம்மன் மற்றும் பால விநாயகர், பால முருகன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும், 29ல் நடக்கவுள்ளது. நேற்று முன்தினம் யாகசாலை, கால்கோள் விழா நடந்தது. நாளை அதிகாலை, விநாயகர் வழிபாடு, கூடுதுறையில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வருதல் நடக்கிறது. வரும், 28ல் கோபுர கலசம் வைக்கும் நிகழ்ச்சி, 29ல் காலை, 6:00 மணிக்கு பட்டத்தரசி அம்மனுக்கு கும்பாபி?ஷகம் நடக்கிறது. இதை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.