வெங்கம்பூரில் கும்பாபிஷேக விழா
ADDED :2890 days ago
கொடுமுடி: வெங்கம்பூர், வரதராஜ பெருமாள் வகையறா திருக்கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று காலை நடந்தது. சோழீஸ்வரர், சிவகாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, பாண்டமங்கலம் ராம்குமார் சிவாச்சாரியார் சர்வ சாதகத்தில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், மேற்கு ராசாம்பாளையம் பாலமலை தண்டாயுதபாணி சுவாமி கோவில், கும்பாபிஷேக விழாவும் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.