உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமுருகன் கோயிலில் கார்த்திகை தீப விழா காப்புக்கட்டு

பாலமுருகன் கோயிலில் கார்த்திகை தீப விழா காப்புக்கட்டு

கீழக்கரை: கீழக்கரை தட்டாந்தோப்புதெரு வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை தீபதிருநாளை முன்னிட்டு காப்பக்கட்டுதலுடன் விழா துவங்கியது.மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரத்தில் காணப்பட்டார். கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடந்தது. வரும் டிச.,2 அதிகாலை 5:30 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலை 6:00 மணிக்கு கார்த்திகை நெய்தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தலைவர் மனோகரன், இந்துநாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !