பழநி ஆண்டவர் கோவிலில் உழவாரப்பணி
ADDED :2969 days ago
அன்னுார்: எல்லப்பாளையம் பழநி ஆண்டவர் கோவிலில், சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டத்தினர் உழவாரப்பணி செய்தனர். அவிநாசி, திருப்பூர் பகுதியைசேர்ந்தவர்கள் இணைந்து, ‘கொங்குமண்டல அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டுக் கூட்டம்’ எனும் அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பில், ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிறன்று, ஏதாவது பழமையான கோவிலில், உழவாரப்பணி செய்து வருகின்றனர். 35 ஆண்டுகளுக்கு மேலாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அன்னுார் அருகே எல்லப்பாளையத்தில், பழமையான பழநி ஆண்டவர் கோவிலும், வீரமாத்தியம்மன் கோவிலும் உள்ளன. 439வது மாத மாக, இந்த மாதம் இக்கோவிலில் உழவாரப்பணி செய்தனர். கோவில் வளாகம் துாய்மைப்படுத்தப்பட்டது. மதியம் அபிேஷக பூஜை நடந்தது. அப்பரடிப்பொடிகள் தலைமையில், 150 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.