திருப்பூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2931 days ago
திருப்பூர் : திருப்பூர், மங்கலம் அருகேயுள்ள பொங்கே கவுண்டம்புதூர் செல்வ விநாய கர் கோவிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாக சாலை பூஜைகள் நேற்று முன் தினம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது.நேற்று காலை, மகா கும்பாபிஷேகம் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சார்யார்கள் கோபுர கலசத்திற்கு புனித நீரை அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, மூலவருக்கு மகாபிஷேகம், தச தரிசனம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.