பவானி பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2901 days ago
பவானி: பவானி, பழனியாண்டவர் கோவில் கும்பாபி?ஷகம், நேற்று நடந்தது. பவானி தலைமை தபால் அலுவலகம் அருகில், பழனியாண்டவர் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக விழா, கடந்த மாதம், 28ல் துவங்கியது. இதையடுத்து தினமும், பல்வேறு பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, புண்யாகவாஜனை, பஞ்சகவ்யம், மங்கள திரவிய ஹோமம், பூர்ணாஹுதி, யாத்ரா தானம், கடம் புறப்படுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து, காலை, 6:15 மணிக்கு மூலவர் விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகள் மற்றும் மூலவர் பழனியாண்டவருக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் பவானி நகர முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.